மார்ச் 14, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 14, 2014, 05:26 PM

Subscribe

இன்றைய (14-03-2014) பிபிசி தமிழோசையில்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு கவலைவெளியிட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கை அமைச்சர் ரிஷத் பதியுதீன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் அமைச்சர் மன்னிப்பு கோரியிருப்பது குறித்த செய்திகள்;

ஐ. நா.வில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை மீதான தீர்மானத்திற்கு எதிராகவும், ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பேரணி நடத்தியுள்ள குறித்த செய்திகள்;

எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட கூட்டணி கிடைக்காமல் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பு நாளிதழாக சமீப காலம் வரை வெளிவந்த தேசிய முரசு பத்திரிகையின் ஆசிரியர் கோபண்ணாவின் செவ்வி;

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளில் மட்டும் போட்டியிடப்போவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளது பற்றிய செய்திகள்;

பாஜக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு இறுதியாகாமலே தேமுதிக , முதல் கட்டமாக, 5 தொகுதிகளுக்கான தங்களது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துவிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை ஒருதலைப்பட்சமாக துவங்கியிருப்பது குறித்த செய்திகள்;

பாகிஸ்தானில் கூட்டாக பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவிருந்த இளம்பெண் ஒருவர் அதில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றுகூறி தீக்குளித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.