மார்ச் 15, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 15, 2014, 06:01 PM

Subscribe

இன்றைய (15-02-2014) பிபிசி தமிழோசையில்

காணாமல்போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தொலைதொடர்புக் கருவிகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே பாதை மாறி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தரவுகள் காட்டுவதாக மலேசியப் பிரதமர் அறிவித்துள்ளது பற்றிய செய்திகள்;

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட இரு பெண்களை விடுதலை செய்யக்கோரி இன்று வவுனியாவில் நடந்த ஆர்பாட்டம் தொடர்பான செய்திகள்;

இலங்கையில் சிறைக்கைதிகளுக்கென தனியான பாடசாலையொன்று திறக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது குறித்த செய்திகள்;

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நடந்துவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கின் விசாரணையில் இரண்டாவது நாளாக வழக்கு விசாரணையில் ஆஜராகத அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது குறித்த செய்திகள்;

இந்திய நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேமுதிக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கும் பணி எந்த மட்டத்தில் இருக்கிறது என்பது குறித்து பாஜகவின் வானதி சீனிவாசனின் பிரத்யேக பேட்டி;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்