மார்ச் 16, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 16, 2014, 05:41 PM

Subscribe

இன்றைய (16-03-2014) பிபிசி தமிழோசையில்

யுக்ரெய்னுடன் இருந்துவருகின்ற க்ரைமீயா பிராந்தியம், அதிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர வேண்டுமா என்பது சம்பந்தமான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு க்ரைமீயாவில் நடந்துவருவது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடக்கே மாங்குளம் பகுதியில் காணாமல்போன ஆசிரியரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று எழுந்திருக்கும் கோரிக்கை குறித்த செய்திகள்;

இந்திய பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜகவால் முன் நிறுத்தப்படும் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து போட்டியிடுவதன் பின்னணி காரணம் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் சூழலில் இந்திய ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் உருவாகியிருக்கும் பெரும் சர்ச்சை குறித்த பெட்டகம்

வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள இந்துக்களின் புனித நகரமான விருந்தாவலில் வசிக்கும் சுமார் 15000 விதவைகளின் அவலத்தை பேசும் செய்தித்தொகுப்பு ஆகியவற்றை கேட்கலாம்.