மார்ச் 18 - தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,
• க்ரைமியாவை ரஷ்யாவோடு இணைத்துக் கொள்ள ரஷ்ய நாடாளுமன்றம் வரைவு மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு,
• காணாமல் போன மலேசிய விமானத்தை சீனா தனது நிலப்பரப்புக்குள் தேடத் தொடங்கியிருப்பது பற்றிய செய்தி,
• தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அரசு தொழிற்பேட்டை ஒன்றின் தனியார் சாயத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விஷ வாயு விபத்தில் ஏழு தொழிலாளர்கள் பலியாகியிருப்பது பற்றிய செய்தி,
• ஐபிஎல் பெட்டிங் மோசடி விவகாரத்தில் இந்திய அணித்தலைவர் தோணிக்கெதிராக சில ஊடகங்கள் செய்தி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது பற்றிய செய்தி,
• இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி
ஆகியவையும், பின்னர் அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியும் கேட்கலாம்.
