இன்றைய ( மார்ச் 21) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் , இந்த தேர்தலில் தனது தொகுதியான சிவகங்கையில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டிருப்பது பற்றி பாஜக விமர்சனம் குறித்த செய்தி, இந்த விமர்சனத்துக்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அளிக்கும் பதில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் என்று கருதப்பட்ட துகள்களைத் தேடும் முயற்சியில் இரண்டாவது நாளாக இன்றும் பலன் கிடைக்கவில்லை என்பது குறித்த செய்தி
பிரிட்டனில் பல நாடுகளைச் சேர்ந்த போர்க்க்குற்றவாளிகள் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள் என்று பிரிட்டனின் எல்லைப்பாதுகாப்பு முன்னாள் தலைவர் கூறியிருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்த செய்தி
இலங்கையின் வட மாகாணத்தில் மனித உரிமைப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடந்த ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்தி ஆகியவை
கேட்கலாம்
