மார்ச் 22 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (22-03-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் நடத்தப்பட்ட இராணுவத் தேடுதல் நடவடிக்கை குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் விமர்சனம்;
அந்த விமர்சன்ங்கள் குறித்து இலங்கை ராணுவத்தின் மறுப்பு;
இலங்கை இராணுவத்தில் புதிதாக சேர்ந்த பெண்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்கள் அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டி, கடுமையாகத் தாக்குவதாக வெளியான காணொளி காட்சிகள் உண்மையானவையே என்று இலங்கை இராணுவம் கூறியுள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக மட்டக்களப்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை இன்று சனிக்கிழமை நிறைவு செய்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் காவல்துறையின் தடுப்பில் உள்ளபோது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்கள் கொல்லப்படுவது தொடர்பில் சிறப்பு ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது குறித்த செய்திகள்;
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுகான பாஜக கூட்டணியில் பாண்டிச்சேரி யாருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து பாமக மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையில் நீடிக்கும் குழப்பம் தொடர்பான செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
