மார்ச் 23 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 23, 2014, 04:57 PM

Subscribe

இன்றைய (23-03-2014) பிபிசி தமிழோசையில் முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆனபிறகும், அங்கே மோசமான மனித உரிமை மீறல்களும், சித்ரவதைகளும், துஷ்பிரயோகங்களும், பாலியல் தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாக பிரிட்டனில் இருந்து இயங்கும் மனித உரிமை அமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது குறித்த செய்திகள்;

இதை மறுக்கும் இலங்கை ராணுவத்தின் பேச்சாளரின் கருத்துக்கள்;

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்டிருக்கும் தீர்மானம் அடுத்தவாரம் ஐநா மன்றத்தின் மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட இருக்கும் சூழலில், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள், குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம் சூடுபிடிக்கத்துவங்கியிருக்கிறது.முன்பு சியாரோலியோன் விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறை இலங்கையிலும் கடைபிடிக்க வேண்டுமென பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இவரது இந்த யோசனை எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்று, டில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தெற்காசியவியல் துறை பேராசிரியர் பி சஹாதேவன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;

இலங்கையில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் எண்ணிகயில் வீழ்ச்சி அடைந்திருப்பது எதை காட்டுகிறது என்பது தொடர்பாக நிலவும் இருவேறு கருத்துக்கள் தொடர்பான செய்திகள்;

திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கும் முக அழகிரியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேசியிருப்பது குறித்து மு க அழகிரியின் செவ்வி;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.