இன்றைய ( மார்ச் 24) பிபிசி தமிழோசை
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் மலேசிய விமானத் தேடல் முயற்சிகளில் பெரிய பலன் எதுவும் கிட்டாத நிலையில், அது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று மலேசியப் பிரதமர் கூறியிருப்பது பற்றிய செய்தி
ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மான வரைவில், விசாரணைக்குரிய காலகட்ட்த்தை தெளிவாக்கி திருத்திய முன்வரைவு வெளிவந்திருப்பது பற்றி , உலகத் தமிழர் பேரவையின் கருத்து
இலங்கை இந்திய மீனவர்களிடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்ப்ட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
இந்தியாவில் ஆதார் அடையாள அட்டையை அரசு சேவைகள் பெறுவதற்கு கட்டாயமாக்க்க்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றிய செய்தி
தமிழகத்தில் போலிஸ் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்தினருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
ஆகியவை
கேட்கலாம்
