மார்ச் 29 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 29, 2014, 06:36 PM

Subscribe

இன்றைய (29-03-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு மாத பெண் குழந்தையை எட்டாயிரம் ரூபாய்க்கு விற்ற முயன்றதான புகாரில் அந்த குழந்தையின் தாய் உட்பட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்த செயலுக்கான காரணிகளை அலசும் ஆய்வுக்கண்ணோட்டம்;

இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குறித்த விவரங்கள்;

ஒருபால் உறவுக்கார ஜோடிகள் சட்டப்படி மதரீதியாக திருமணம் செய்துகொள்ள அனுமதியளிக்கின்ற சட்டம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து பல ஒருபால் உறவு தம்பதிகள் மதரீதியில் திருமணம் செய்து கொண்டிருப்பது குறித்த பெட்டகம்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.