மார்ச் 31 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 31, 2014, 05:15 PM

Subscribe

இன்றைய (31-03-2014) பிபிசி தமிழோசையில்

நாம் வாழும் பூமியின் பருவநிலை மாற்றங்களை கட்டுப்படுத்த பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், மிக மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரும் என்று ஐநா எச்சரித்துள்ளது குறித்த செய்திகள்;

தமிழ்த் திரைப்படமான 'இனம்' உண்டாக்கிய அரசியல் சர்ச்சை காரணமாக இந்த திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளில் இருந்தும் திரும்ப பெறுவதாக இதன் விநியோகஸ்தரான பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளது குறித்த செய்தி;

சர்ச்சையில் சிக்கியிருக்கும் “இனம்” திரைப்படத்தை பார்த்தவர்களில் ஒருவரான தமிழ்திரைப்பட வரலாற்று ஆய்வாளர் தனஞ்செயன் கோவிந்த் வழங்கும் ஆய்வுக்கண்ணோட்டம்;

இந்திய தலைநகர் டில்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் அவர்களின் வீடுகளில் இரவுநேரத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தில்லியின் முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தில்லி காவல் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியிருப்பது குறித்த செய்திகள்;

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீதான எல்லா வழக்குகளையும் திரும்பப்பெற முடியாது என்று தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இலங்கைக்கு சென்றிருந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணி கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதிகட்ட விசாரணைகள் குறித்த செய்தி;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.