.எம் விடுதலைக் கனலை முள்வேலி போட்டு தடுத்துவிட முடியாது: ருத்ரகுமாரன்
Share
Subscribe
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில், புலம்பெயர் அமைப்புகளைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்டோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ள பின்னணியில், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் 16ஐ தடை செய்வதாக அது அறிவித்திருந்தது.
இந்த அமைப்புகளின் பெயர்களைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ள அரசின் கெஜட் அறிவிப்பில், இந்த அமைப்பின் பெயர்களுடன், சுமார் 400க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள கெஜட் அறிவிப்பில் இருக்கும், இந்தத் தனி நபர்கள் பட்டியலில் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசு போன்ற பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் இந்த தடையைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்களை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
