மின்புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் தமிழ் எழுத்தாளர்கள்
Share
Subscribe
தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் தமது படைப்புகளை மின்புத்தகங்களாக வெளியிடுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் தமது படைப்புகளுக்கு பதிப்பு நிறுவனங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் இணையத்தில் மின் புத்தகங்களாக வெளியிடுவதாக கூறப்படுகிறது. தமிழ் படைப்புகளை மின்புத்தகமாக வெளியிடுவதற்கு சென்னையில் இருந்து இயங்கும் www.freetamilebooks.com என்ற இணையதளம் உதவி வருகிறது. இந்த இணைய தளத்தின் இயக்க ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிவரும் டி.ஸ்ரீநிவாசனின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
