இன்றைய ( ஏப்ரல் 7) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 07, 2014, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கை கடைசி நேரத்தில் இன்று வெளியாகியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு, இந்த தேர்தல் அறிக்கையில், கட்சியின் மையமான இந்துத்துவக் கொள்கைத் திட்டங்களான, ராமர் கோயில் கட்டுதல் போன்ற விஷயங்கள் சற்று மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சொல்லப்பட்டிருப்பது பற்றிய ஒரு அலசல்

தமிழ்நாட்டில் வேட்பு மனு பரீசிலனை நடந்து முடிந்திருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

இலங்கையின் வடக்கே ராணுவ கெடுபிடி அதிகரித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருப்பது பற்றிய செய்தி

ருவாண்டாவில் இனப்படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆவது குறித்த ஒரு பெட்டகம்

பின்னர் விளையாட்டரங்கம்

ஆகியவை கேட்கலாம்