ஏப்ரல் 12 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (12-04-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் வடக்கே நெடுங்கேணி பிரசேத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அனுராதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை கூறுயிருப்பது குறித்த செய்திகள்;
இதில் கோபி என்று இலங்கை இராணுவம் அழைக்கும் செல்வநாயகம் கஜீபனின் உடலை அடையாளம் காட்டிய அவரது மாமனார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;
தற்போதைய இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் தமிழ்நாட்டின் சுமார் 11 லட்சம் புதிய வாக்காளர்களின் கருத்துக்கள்;
இந்தியத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் ஒருவருக்கு பதிலாக, அவரது சாயலில் இருக்கும் இன்னுமொருவர் பிரச்சாரம் செய்வது வாக்களர்கள் மத்தியில் சுவாரஸ்யமாக பார்க்கப்படுவது குறித்த செய்திகள்;
வலதுசாரி இந்து தேசிய வாதத் தலைவரான நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவது நாட்டுக்கு கேடு விளைவிக்கும் என்று புகழ்பெற்ற கலைஞர்கள் சிலர் பிரிட்டிஷ் நாளிதழுக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்த செய்திகள்;
ஐநாவுக்கான இரானியத் தூதராக நியமிக்கப்பட்டவருக்கு அமெரிக்கா விசா மறுத்தாலும், அந்த தூதரை மாற்றப்போவதில்லை என இரானிய அமைச்சர் தெரிவித்துள்ளதன் பின்னணியை விளக்கும் பிபிசியின் ஆய்வுக் கண்ணோட்டம்;
காமாலை நோய் வகைகளில் ஒன்றான ஹெபாடிடிஸ் சி என்கிற வகை நோயை குணப்படுத்தவல்ல மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளது குறித்த செய்திக்குறிப்பு ஆகியவற்றை கேட்கலாம்.
