இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கூறி வழக்கு

Apr 15, 2014, 02:39 PM

Subscribe

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்துக்கு துணையாகக் களத்தில் செயற்பட்டது என்று குற்றஞ்சாட்டி அதனை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்படி நடந்திருந்தால், நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய அப்படியான நடவடிக்கை இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியுள்ள வழக்கை தாக்கல் செய்த டில்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரான ராம் சங்கர், அது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை மன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். அவரது செவ்வியை இங்கு கேட்கலாம்.