ஏப்ரல் 16 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (16-04-2014) பிபிசி தமிழோசையில்
இந்தியாவின் ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து இந்தியக் கிரிக்கெட் வாரியமே ஒரு விசாரணையை முன்னெடுத்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டில் சோனியாகாந்தி தமிழ்நாட்டில் முதல்முறையாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்திருப்பது குறித்த செய்திகள்;
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடும் விருதுநகர் தொகுதி நிலவரம் குறித்த பெட்டகம்;
2013 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் ள் மறைந்த இயக்குநர், பாலுமகேந்திராவின் கடைசி திரைப்படமான "தலைமுறைகள்" படம் தேசிய ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ் விருதைப் பெற்றுள்ளது குறித்த செய்திகள்;
“தலைமுறைகள்” திரைப்படத்திற்கு விருது கிடைத்திருப்பது பற்றி அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் பேட்டி;
ஊடகவியலாளர்கள் கொலையுண்ட சம்பவங்களில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காத நிலைமைகள் நீடிக்கின்ற நாடுகளின் வரிசையில் உலகில் நாலாவது இடத்தில் இலங்கை இருப்பதாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான அமைப்பு ஒன்று தெரிவித்திருப்பது பற்றிய செய்திகள்;
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளவர்களாக இருப்பதால் அவர்களுக்கு கவுன்சிலிங் முகாம்கள் நடத்தப்படவிருப்பதாக ஜனாதிபதியின் ஆணைக்குழு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
