ஏப்ரல் 18 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 18, 2014, 05:02 PM

Subscribe

இன்றைய (18-04-2014) பிபிசி தமிழோசையில்,

இலங்கையின் கிழக்கே ஒலுவில் பகுதியில் அமைந்திருக்கும் கடற்படை முகாமை அங்கிருந்து மாற்றும்படி முஸ்லீம்கள் ஆர்பாட்டம் நடத்தியிருப்பது குறித்த செய்திகள்;

தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை பகுதியை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஹம்பாந்தோட்டை மாநகர மேயர் தாக்க முயன்றதாக அந்த கட்சி குற்றம் சாட்டியிருப்பது குறித்த செய்திகள் மற்றும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுக்கும் மேயரின் செவ்வி;

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு இன்னமும் சிறையிலுள்ள ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்தவாரம் அளிக்கப்படும் என்று தலைமை நீதிபதி சதாசிவம் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டின் கன்யாகுமரி நாடாளுமன்றத் தொகுதி நிலவரம் குறித்த பெட்டகம்;

தென்கொரியாவில் கடந்த புதன்கிழமையன்று 475 பேருடன் கடலில் மூழ்கிய கப்பலின் தலைமை மாலுமியை கைதுசெய்வதற்கான பிடி-ஆணை நீதிமன்றத்தில் கோரப்பட்டிருப்பது பற்றிய விரிவான செய்திகள்;

மறைந்த இலக்கிய நொபெல் பரிசு வென்ற கொலம்பிய எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கெஸின் இலக்கிய பங்களிப்பு மற்றும் வாழ்க்கை பற்றிய பிபிசியின் செய்திகுறிப்பு ஆகியவற்றை கேட்கலாம்.