ஏப்ரல் 25 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (25-04-2014) பிபிசி தமிழோசையில்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருப்பது குறித்த செய்திகள்;
இன்றைய தீர்ப்பு பற்றி தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கருத்துகள்;
இவர்களின் விடுதலையில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து முன்னாள் நீதிபதி ஏ ஆர் லக்ஷமணனின் செவ்வி;
இந்தியாவில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க. தலைவர் மு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது மத்திய அமலாக்கப் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது குறித்த செய்திகள்;
விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முனைந்தார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் மேலும் ஒருவர் இலங்கையின் வடக்கே கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் பொதுபலசேனா அமைப்பின் தேசத்துரோகக் குற்றச்சாட்டை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு நிராகரித்திருப்பது குறித்த செய்தி; இந்தியாவிலிருந்து வந்து சிறுநீரகங்களை பணத்திற்கு விற்கும் ஆட்களுக்கும் அவர்களின் முகவர்களுக்கும் இலங்கையிலுள்ள சில மருத்துவமனைகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விரிவான செய்திகள்;
நேபாளத்தில் மலையேறுவோர்க்கு வழிகாட்டிகளாக இருந்துவரும் ஷெர்பா இனத்தார் 16 பேர் சென்ற வாரம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பின்னணியில், தற்போதைய மலையேற்ற பருவத்தில் ஏனையோரின் பயணங்கள் தொடருமா என்பதே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் நேபாள மலையேறிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் ஷெர்பாக்களின் நிலைமைகள் குறித்த விரிவான செய்திக்குறிப்பு ஆகியவற்றை கேட்கலாம்.
