ஏப்ரல் 26 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 26, 2014, 04:31 PM

Subscribe

இன்றைய (26-04-2014) பிபிசி தமிழோசையில்,

உக்ரெய்னில் ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் காரணம் காட்டி ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை கடுமையாக்கப்போவதாக ஜி 7 பொருளாதார வல்லரசுகளின் குழு அறிவித்துள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்தில் சில பாடசாலைகளுக்குச் சென்ற பாதுகாப்புப்படையினர் அங்கு ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்களைச் சேகரித்து, அவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாக எழுந்துள்ள சர்ச்சை பற்றிய செய்திகள்;

இலங்கையின் கிழக்கே சம்புர் மக்கள் இடம்பெயர்ந்து இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தங்களின் மீள்குடியேற்றம் வேண்டி நிற்கும் இடம்பெயர்ந்த சம்புர் மக்களின் இன்றைய நிகழ்வுகள் தொடர்பான செய்தி;

இலங்கை ஜனாதிபதியினால் கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்துக்கு இன்னமும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பதில்கள்;

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் பாஜகவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியின் முன்னிலையில் இணைந்தது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் அடைவதாக தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.