மே 7 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 07, 2014, 05:48 PM

Subscribe

இன்றைய (07-05-2014) பிபிசி தமிழோசையில்

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையிலான தாவாவாக நீடித்துவரும் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தக்கோரும் தமிழக அரசின் கோரிக்கையை இந்திய உச்சநீதி மன்றம் அங்கீகரித்து அளித்திருக்கும் தீர்ப்பு குறித்த செய்திகள்;

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து, இந்தப் பிரச்சினையில் முன்னர் உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவில் தமிழ்நாடு சார்பாக அங்கம் வகித்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லக்ஷமணனின் செவ்வி;

தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்த செய்தி

ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுத்திருந்த விலங்குகள் கொடுமை தடுப்பு அமைப்பான பெடாவின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடியிருந்த மூத்த வழக்கறிஞர் ராஜ் பாஞ்வானியின் பேட்டி;

பெடாவின் அமைப்பின் வழக்கறிஞர் ராஜ் பாஞ்வானியின் கருத்தை மறுக்கும் ஜல்லிக்கட்டு பேரவை என்ற அமைப்பின் தலைவர் ராஜசேகரின் செவ்வி;

இலங்கையில் சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக நிலம் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாக இலங்கை அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கை அரசின் இந்த முன்னெடுப்பு குறித்து பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள்;

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இந்த மாதம் 18 ஆம் தேதியுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அந்த காலகட்ட்த்தில் யாழ்பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படுவதாக செய்யப்பட்டிருக்கும் அறிவிப்பு சர்ச்சையை தோற்றுவித்திருப்பது குறித்த செய்திகள்;

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வரும் சூழலில் யானைகள் ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்தியிருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.