மே 9 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 09, 2014, 05:11 PM

Subscribe

இன்றைய (09-05-2014) பிபிசி தமிழோசையில்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை கண்டித்து போராட்டம் நடந்துள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையின் தெற்கே களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் முஸ்லிமின் கடை ஒன்று கடந்த நேற்றிரவு தீ வைத்து எரிக்கப்பட்டதைத்தொடர்ந்து அங்கு நிலவும் முருகல்நிலை குறித்த செய்திகள்;

இலங்கைக் காடுகளிலிருந்து யானைக்குட்டிகள் கடத்தப்பட்டு ஒவ்வொரு யானைக்குட்டியும் சுமார் 4 கோடிவரை விற்கப்படுவதாகவும், இதன் பின்னணியில் அரசியல்வாதிகளே இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருப்பது குறித்து இதைத் தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து இலங்கையின் வன உயிர்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜயமுனி சொய்ஸா பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;

மத்திய புலனாய்வுத் துறை என்றழைக்கப்படும் சிபிஐயின் கூடுதல் இயக்குநராக தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பணிபுரிவதற்கு தடை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது குறித்த செய்தி;

பாஜக சார்பில் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் முக்கிய தொகுதியாக மாறியிருக்கும் நிலையில் அந்த தொகுதியின் கள நிலவரம் குறித்த நேரடித்தகவல்கள் ஆகியவற்றை கேட்கலாம்.