மே 10 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 10, 2014, 06:46 PM

Subscribe

இன்றைய (10-05-2014) பிபிசி தமிழோசையில்

ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட சர்வதேச விசாரணை என்பதைத்தை தவிர ஏனைய அனைத்தையும் நடைமுறைப்படுத்த இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை ஜனாதிபதி கூறியதாக சரும் செய்திகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வி;

இலங்கையிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விக்கு இந்திய தேர்தல் முடிந்தபிறகு இது குறித்த விவரங்களை இலங்கை அரசு வெளியிடும் என்று கூறியிருப்பது குறித்த செய்திகள்;

மஹராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலில் பிற்படுத்தப்பட்டவர்களையும் பெண்களையும் கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கவுள்ளது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள சி இ ஓ ஏ மெட்ரிக்குலேஷன் பள்ளிமாணவர்கள் 12 பேர் பள்ளிச்சீருடையில் ஷாப்பிங் மாலுக்கு சென்றதாக காரணம் கூறி அவர்களை முதலில் ஆண்டு இறுதித் தேர்வை எழுத அனுமதி மறுத்த பள்ளிக்கூட நிர்வாகம் அடுத்தகட்டமாக அனைவரையும் ஒட்டுமொத்தமாக பள்ளியில் இருந்து நீக்கியிருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது குறித்த செய்திகள்;

பத்து ஆண்டுகளுக்கு முன் போலியோ நோயை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடக்கூடிய நிலையிலிருந்த; போலியோ தடுப்பு என்பது முஸ்லிம்களை மலடாக்கும் சதிவேலை என்று பரப்பப்பட்ட அச்சம், தாலிபான்களின் எழுச்சி, போலியோ தடுப்பு ஊழியர்கள் சுடப்பட்ட சம்பவங்கள் போன்றவற்றின் காரணமாக தற்போது உலகிலே போலியோ வேகமாக அதிகரித்துவரும் நாடாக பாகிஸ்தான் உருமாறியுள்ள நிலைமை குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.