பள்ளிச்சீருடையில் ஷாப்பின் மாலுக்கு சென்ற மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கியது சரியா?
Share
Subscribe
தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள சி இ ஓ ஏ மெட்ரிக்குலேஷன் பள்ளிமாணவர்கள் 12 பேரை அந்த பள்ளிக்கூடம் திடீரென்று இடைநீக்கம் செய்திருக்கிறது. அவர்கள் பள்ளிச்சீருடையில் ஷாப்பிங் மாலுக்கு சென்றதை காரணம் காட்டி அவர்களை முதலில் ஆண்டு இறுதித் தேர்வை எழுத அனுமதி மறுத்த பள்ளிக்கூட நிர்வாகம் அடுத்தகட்டமாக அனைவரையும் ஒட்டுமொத்தமாக பள்ளியில் இருந்து நீக்கியது.
அப்படி நீக்கப்பட்டவர்களில் ஐந்து மாணவர்கள் நீதிமன்றத்தை அணுகி தங்களின் நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அவர்களின் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர்களின் நீக்கத்திற்கு தடை விதித்திருக்கிறது.
இந்த மாணவர்கள் சார்பில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர் அருள் வடிவேல் மற்றும் சி இ ஓ ஏ மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தலைமை நிர்வாகி ஈ சாமி ஆகிய இருவரும் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்விகள்.
