மோடி அரசாங்கம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு

May 16, 2014, 01:43 PM

Subscribe

இந்தியாவில் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதை இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது.

அறுதிப் பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள மோடி அவர்கள், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காண உதவுவார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்திய மைய அரசின் இலங்கை தமிழர் குறித்த கொள்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டுவர மோடியின் அரசாங்கமும், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மாநில அரசாங்கமும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கே கேட்கலாம்.