மே 16 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 16, 2014, 06:01 PM

Subscribe

இன்றைய (16-05-2014) பிபிசி தமிழோசையில்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருப்பது குறித்த விரிவான செய்திகள்; வெற்றி பெற்ற மோடி தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;

ஆளும் காங்கிரஸ் கட்சி 50 இடங்களுக்கும் குறைவான இடங்களை பிடித்து படுதோல்வியடைந்திருப்பது குறித்து அந்த கட்சியின் மணிசங்கர் ஐயரின் கருத்துக்கள்;

தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக 37 இடங்களை பிடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பது மற்றும் பிரதான எதிர்கட்சியான திமுக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வியடைந்திருப்பது குறித்த விரிவான செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.

பாரதிய ஜனதாக் கட்சியின் பெற்ற வெற்றியின் அளவு பலரைத் திகைக்கவைத்திருக்கிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூட , அக்கட்சி தனித்தே பெரும்பான்மையைப் பெறும் என்று கூறவில்லை. எனவே, இந்த முடிவுகள் அரசியல் நோக்கர்களுக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றனவா என்பது குறித்து தி இந்து பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டம் ஆகியவற்றை கேட்கலாம்.