மே 17 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 17, 2014, 06:53 PM

Subscribe

இன்றைய (17-05-2014) பிபிசி தமிழோசையில்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நரேந்திரமோடி, மே மாதம் 20 ஆம் தேதி அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இந்திய ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை இன்று சனிக்கிழமை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், முறைப்படியாக தனது ராஜினாமா கடிதத்தை கையளித்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவின் பிரதமராக விரைவில் பதவிஏற்க இருக்கும் நரேந்திரமோடி தலைமையிலான அரசு சந்திக்கும் முக்கிய பொருளாதார சவால்கள் என்ன என்பது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார பேராசிரியர் ஆர் சீனிவாசனின் ஆய்வுக்கண்ணோட்டம்;

மோடி தலைமையிலான இந்திய அரசு எதிர்கொள்ளக்கூடிய அந்நிய நாடுகளுடனான உறவு குறித்த சவால்கள் என்ன என்பது குறித்து டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறையின் பேராசிரியர் பி சஹாதேவனின் அலசல்;

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசிடம் இந்தியத் தமிழர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்த சிலரின் கருத்துக்கள்;

இந்தியர்களின் எதிர்பார்ப்பு இதுவென்றால், இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர்கள் சிலரின் குரல்கள்;

இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு இப்படியிருக்க, இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இயல்பாகவே ஒத்துப்போகக்கூடியவர்கள் என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கும் அவரது பிரத்யேக செவ்வி ஆகியவற்றை கேட்கலாம்.