5 வருடங்களின் பின்னர் வட இலங்கை நிலைமை - பெட்டகம்
Share
Subscribe
இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அங்கு முன்னாள் போர் வலயமான வடபகுதியில் பல முன்னேற்றங்கள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறினால், அவை போதுமானவை அல்ல என்று தமிழர் தரப்பில் பலராலும் கூறப்படுகின்றது.
அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தமக்கு போதுமான பலனை தரவில்லை என்று மீள்குடியேறிய பலர் கூறுகிறார்கள்.
இராணுவ அடக்குமுறை தொடர்வதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இந்த நிலையில் வடக்கில் முன்னாள் போர் வலயத்தில் இன்றைய நிலை என்ன என்று ஆராயும் வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அவர்களின் செய்திப் பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.
