மே 23 தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
• இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சை பற்றிய செய்திகள்,
• இதனிடையே இந்த விழாவில் தம்முடன் கலந்துகொள்ள வருமாறு, வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இலங்கை ஜனாதிபதி விடுத்த அழைப்பை அவர் நிராகரித்திருப்பது பற்றிய செய்தி,
• மஹிந்தவுக்கு இந்திய அரசு விடுத்த இதற்கான அழைப்பை பாஜக நியாயப்படுத்தியிருப்பது பற்றிய ஒரு பேட்டி,
• கட்டாய வேலை வாங்குதல் என்ற நவீன அடிமை முறை இலங்கையின் மலையகப் பகுதிகளில் நிலவுகிறதா என்பது குறித்த ஒரு பேட்டி,
• முப்பரிமாண தொழில்நுட்பத்தின் புதிய அம்சமான மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள முதல் இந்தியப் படமான கோச்சடையான் குறித்த ஒரு செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
