வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இலங்கை முன்னேறியுள்ளது: அஜித் கப்ரால்
Share
Subscribe
இலங்கையின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டுக்கு ஏழெட்டு சதவீதம் வரை வளர்ந்து, அதன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு முன்பில்லாத அளவுக்கு அதிகரித்து, வட்டி விகிதம் குறைந்து, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதாரம் முன்னைக்கு மேம்படுவதாகத் தெரிந்தாலும், இலங்கைக்குள் வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து மந்தமாக இருப்பதாகவே கூறப்படுறது.
இந்நிலையில், மேற்குலக முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவேற்கும் நோக்குடன் இலங்கையிலிருந்து ஒரு குழு பிரிட்டன் வந்து தொழிலதிபர்களையும் நிதி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறது.
அக்குழுவின் அங்கமாக பிரிட்டன் வந்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால், சீனாவிலிருந்து மட்டுமல்லாமல் ஏனைய வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதிலும் இலங்கை முன்னேறியுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்
அவரது பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகளின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
