ஜூன் 13 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (13-06-2014) பிபிசி தமிழோசையில்
இராக்கில் தொடரும் உள்நாட்டு போர் உக்கிரமடைந்திருப்பது குறித்த மேலதிக தகவல்கள்;
வெளிநாட்டு நிதிஉதவி பெறும் இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களை முடக்க செயற்படுவதாக கூறும் இந்திய அரசின் மத்திய உளவுத் துறை அறிக்கை ஊடகங்களில் கசிந்திருப்பது குறித்த செய்திகள்;
இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்படுவதாக கூறப்படும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் தலைவர் சுப உதயகுமாரின் செவ்வி;
சென்னை மக்கா மசூதியிலிருந்து செயல்பட்டுவரும் அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற முகமது அஸ்ரஃப் என்ற மாணவர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சிபெற்றுள்ள பின்னணியில் இஸ்லாமியர்கள் ஐஏஎஸ் தேர்வுகளில் காட்டும் ஆர்வம் மற்றும் இஸ்லாமியர் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வு குறித்து அந்த மசூதியின் முதன்மை இமாமான சம்சுதீன் குவாஷினினின் செவ்வி;
இலங்கையின் யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிங்கர் வைரவர் ஆலயத்தில் மிருகபலி கொடுக்கக் கூடாது என்று கோரி இன்று மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் குறித்த செய்திகள்;
இந்த கோரிக்கை குறித்து அந்த கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்; இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கமை பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகள், நேற்று மாலை தாக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறும் நிலையில் இன்றைய நிலைமைகள் குறித்து அங்கு வாழும், களுத்துறை மாவட்ட சமாதானக் குழுவின் செயலாளரான எம்.எச்.எம். குஸைன் மத்தின் செவ்வி;
இலங்கைக்குள் மரண தண்டனையை நிறைவேற்றும் துக்குத் துக்கி பதவியின் சிங்கள பெயரான அலுகோசுவா என்கிற பெயரை மாற்றுவதற்கு சிறை சாலைகள் திணைக்களம் தீர்மானித்து இதற்கான மாற்றுச் சொற்களை பரிந்துரைக்கும்படி பொதுமக்களிடம் அரசு கோரியிருப்பது பற்றிய செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
