ஜூன் 14 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 14, 2014, 05:32 PM

Subscribe

இன்றைய (ஜூன் 14, 2014) பிபிசி தமிழோசையில்

இராக்கில் தொடரும் உள்நாட்டு போரில் அரச எதிர்ப்பு குழுக்களை எதித்து இராக்கிய படையினர் உக்கிரமாக போர்தொடுப்பார்கள் என்று இராக்கிய பிரதமர் அறிவித்திருக்கும் பின்னணியில் இராக்கிய பதற்றத்துக்கான அடிப்படை வரலாற்றுக் காரணம் என்ன என்பதை ஆராயும் ஆய்வுக்கண்ணோட்டம்;

நைஜீரியாவின் போகோ ஹாரம் ஆயுதக்குழுவை தோற்கடிப்பதற்கு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கையாண்ட போர் உத்திகளை பின்பற்ற விரும்புவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

இலங்கையின் வடக்கே காணாமல் போன மாணவன் திரும்ப வந்திருக்கும் நிலையில் அவர் காணாமல் போனதன் பின்னணியை ராணுவம் ஆராயத்துவங்கியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடக்கே காணப்படும் பார்த்தீனியம் என்கிற விஷத்தன்மையுடன் கூடிய களைச்செடியை அகற்றும் நோக்கில் அந்த செடிகளை ஒரு கிலோ பத்துரூபாய்க்கு வாங்கும் அரசின் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்த விவரங்கள்;

இந்தியாவின் மத்திய துணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சென்னையில் தமிழக மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து பேசியிருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.