அளுத்கம நிகழ்வுகளை இலங்கை ஊடகங்கள் கையாண்ட விதம் குறித்த விமர்சனம்
Share
Subscribe
இலங்கையின் தெற்கே அளுத்கம பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை இலங்கையின் தேசிய ஊடகங்கள் கையாண்ட விதம் குறித்த விமர்சனங்கள் சில மட்டங்களில் வெளியாகி வருகின்றன.
இலங்கை அரசின் அழுத்தத்துக்கு பணிந்து பிரதான ஊடகங்கள் இந்த வன்முறைகள் குறித்த முழுமையான, உண்மையான தகவல்களை உரிய முறையில் வெளியிடவில்லை என்று பாதிக்கப்பட்ட முஸ்லீம்களில் ஒரு தரப்பார் விமர்சித்துள்ளனர்.
அதேவேளை முகநூல் உள்ளிட்ட சமூகவளைத்தளங்களில் இந்த வன்முறைகள் குறித்து திரிக்ககப்பட்ட, மதவிரோதத்தை தூண்டக்கூடிய வகையில் செய்திகள் பரப்பப்பட்டன என்கிற விமர்சனங்கள் அரசு தரப்பில் காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த பின்னணியில் இந்த வன்முறைகள் குறித்த செய்திகளை இலங்கையின் ஊடகங்கள் எப்படி கையாண்டன என்று இலங்கையில் இருக்கும் மாற்று கொள்கைகளுக்கான அமைப்பின் மாற்றம் இணைய சஞ்சிகையின் ஆசிரியர் செல்வராஜா ராஜசேகரிடம் தொடர்புகொண்டு கேட்கப்பட்டது.
அவரது செவ்வியை இங்கு கேட்கலாம்.
