ஜூன் 20 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (20-06-2014) பிபிசி தமிழோசையில்
உலக அகதிகள் தினமான இன்று இலங்கையின் இடம்பெயர்ந்து வாழும் அகதிகள் நிலவரம் குறித்த செய்திகள்;
இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலைமைகள் குறித்த நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தவரின் கருத்துக்கள்;
இலங்கையில் அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த தாக்குதலின் போது காயம்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும பிபிசியிடம் தெரிவித்துள்ள செவ்வி;
அளுத்கம தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பிபிசிக்கு அளித்த செவ்வி
அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து வவுனியா நகர பள்ளிவாசல் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல், காவல்துறையினர் கலைத்துள்ளது பற்றிய செய்திகள்
மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் சமூக ஊடகங்களில் ஹிந்தியை தான் முதலில் பயன்படுத்த வேண்டும் என்று மோடி அரசு உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இராக் வன்முறையில் சிக்கி இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள் இந்தியா திரும்பத் தேவையான நிதிஉதவிகளை இராக்கின் இந்திய சமூக நலன்புரி நிதி மூலம் வழங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
