சென்னையில் அச்சுறுத்தலால் திரையிடப்படாத இலங்கைப் படம்
Share
Subscribe
இலங்கையில் தயாரிக்கப்பட்டு சென்னையின் திரையரங்குகளில் திரையிடப்பட்ட படம் ஒன்று திரையரங்குகளிலிருந்து அச்சுறுத்தல்கள் காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ் மொழியில் 'பிறகு' என்ற பெயரிலும் சிங்களத்தில் ஒப நத்து, ஒப ஏக்கா, அதாவது, 'உன்னுடனும், நீயில்லாமலும்' என்கிற பெயரிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், உலகில் பல நாடுகளிலும் திரையிடப்பட்ட பின் சென்ற வாரம் இந்தியாவிலும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் திரையிடப்படும் இந்த படம், சென்னையில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவை குறித்த செய்திகளை ஒலி வடிவில் தொகுத்து வழங்குகிறார் டில்லி செய்தியாளர் ஜெயக்குமார்.
