ஜூன் 27 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 27, 2014, 04:46 PM

Subscribe

இன்றைய (27-06-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் 18வது அரசியல் சட்டத்திருத்தம் நாட்டின் நீதித்துறைக்கு பங்கம் ஏற்படுத்தியிருப்பதாக வட மாகாண முதல்வரும், முன்னாள் நீதிபதியுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பொதுபல சேனா புத்த பிக்குகளை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்று இலங்கை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் நியமிக்கப்படுவதை பாஜக அரசு எதிர்ப்பதாக வெளியான செய்திகள் குறித்து அவரது கருத்துக்கள்;

தமிழ்நாட்டில் இருக்கும் கிரானைட் குவாரிகள் மற்றும் மணல் குவாரிகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;

யாத்திரைகளும், மக்கள் பெருமளவில் ஓரிடத்தில் கூடும்போது ஆன்டி பயோட்டிக் எனப்படும் நுண்ணுயிர் கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் பயனற்றுப் போகும் தன்மை கூடும் மக்கள் மத்தியில் பரவி, அதனை அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு எடுத்துச் செல்லும் நிலை உருவாவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது குறித்த செய்திகள்;

எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரங்கள் குறித்தும், பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பாலியல் கல்வி’ குறித்தும் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தொடர்பான பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.