ஜூலை 2 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 02, 2014, 04:51 PM

Subscribe

இன்றைய (02/07/2014) பிபிசி தமிழோசையில்

சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியான சம்பவம் தொடர்பில் தமிழக அரசிடம் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கோரியிருப்பது குறித்து தமிழ்மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கே.பாஸ்கரன் பிபிசி தமிழோசைக்கு அளித்திருக்கும் பிரத்யேக செவ்வி;

இதில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து கட்டிடத் தொழிலாளர்கள் பஞ்சாயத்து சங்கத்தின் கூடுதல் பொதுச் செயலாளர் கீதாவின் செவ்வி;

சென்னையில் நடந்த அடுக்குமாடி கட்டிட விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற அடுக்கு மாடிக் கட்டிடங்கள், கட்டிட விதிமுறைகள்படி கட்டப்பட்டுவருகின்றனவா, என்பது குறித்து, இந்திய கட்டுமானக் கலைஞர்கள் கழகத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் சி.ஆர்.ராஜுவின் செவ்வி;

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்த செய்திகள்;

கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கில் இந்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் உறுதிச் சான்றை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பான செய்திகள்;

இலங்கையில் இன ரீதியான, மத அடிப்படையிலான துவேஷம் வளர்க்கப்படுவதையும் இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதையும் இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் என ஐநாவின் மத சுதந்திரம், சிறுபான்மையினர் விவகாரம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட மரண தண்டனை ஆகியவற்றுக்கான சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளது குறித்த செய்திகள்;

ஆஸ்திரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரி படகு மூலம் சென்ற இலங்கை தமிழர்கள் ஆஸ்திரேலிய அரசால் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்களா என்பது குறித்து ஆஸ்திரேலியாவில் இருக்கும் அகதித்தஞ்சம் கோருவோருக்கான தகவல் மையத்தின் அகதி உரிமைகளுக்கான வழக்கறிஞர் பமிலா கர் பிபிசியிடம் தெரிவித்த கருத்துக்கள்;

மட்டக்களப்பு மாவட்டத்தில் மது விற்பனையை கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரி மட்டக்களப்பு நகரில் பெண்கள் நடத்தியிருக்கும் போராட்டம் குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.