சென்னை கட்டிடம் இடிந்த சம்பவம் மனித உரிமை மீறலா?
Share
Subscribe
சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பில், தமிழக அரசு தரப்பு விளக்கத்தை இரண்டு வாரங்களுக்குள் தம்மிடம் அளிக்கக் கோரி இன்று புதன்கிழமை இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்த விபத்து குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
இது குறித்து தமிழ்மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கே.பாஸ்கரன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வி
