இராக்கில் சிக்கிய இந்திய செவிலியர் விடுதலை: உறவினர் தகவல்
Jul 04, 2014, 08:59 AM
Share
Subscribe
இராக்கில் நடந்து வரும் மோதலில் திக்ரித் நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிக்கியிருந்த 46 இந்திய செவிலியர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அந்த செவிலியர்களில் ஒருவரின் உறவினரான ஜனார்த்தனன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். அப்படி விடுவிக்கப்பட்ட தமது உறவினரான செவிலியர் ஒருவரிடம் தாம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
