ஜூலை 4 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (04-07-2014) பிபிசி தமிழோசையில்
இராக்கின் திக்ரித் நகரில் சிக்கியிருந்த இந்திய நர்ஸ்கள் அனைவரும் விடுதலையாகியுள்ள நிலையில் இந்த செவிலியரில் ஒருவர் உறவினரின் செவ்வி;
சென்னையில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
தர்மபுரி தலித் இளைஞர் இளவரசன் அஞ்சலி நிகழ்வுகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பது குறித்து அவரது செவ்வி;
இந்திய நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியத் தேர்தல் ஆணையம் முறைகேடாகவும் பக்கச்சார்பாகவும் நடந்ததாக முறையிட்டு திமுக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் அமெரிக்க நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இலங்கை அரசின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கையின் வடக்கே விரைவான மீள்குடியேற்றம் கோரி இன்று கிளிநொச்சியில் ஆர்பாட்டம் ஒன்று நடந்திருக்கிறது குறித்த செய்தி;
பிரிட்டனில் இருக்கும் முஸ்லிம்கள் சிரியாவுக்கோ அல்லது இராக்குக்கோ போகக் கூடாது என்று பிரிட்டனில் இருக்கும் நூற்றுக்கும் அதிகமான இமாம்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
