ஜூலை 5 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 05, 2014, 05:42 PM

Subscribe

இன்றைய (05-07-2014) பிபிசி தமிழோசையில்

இராக்கின் திக்ரித் நகரில் சிக்கியிருந்த இந்திய நர்ஸ்கள் 46 பேரும் சனிக்கிழமை இந்தியா வந்து சேர்ந்திருக்கும் நிலையில் அவர்களில் ஒருவரனா மோனிஷா என்கிற தமிழக செவிலியின் பிரத்யேக செவ்வி;

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தனது நான்கு நாள் விசாரணைகளை இன்று ஆரம்பித்துள்ளது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டில் தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் நிறுவனத்துக்கு மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கும் பின்னணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு கேபிளுக்கு மத்திய அரசு உரிமம் வழங்காமல் இருப்பது ஏன் என்பது குறித்து சென்னை மெட்ரோ கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம் ஆர் ஸ்ரீனிவாசனின் ஆய்வுக்கண்ணோட்டம்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.