ஜூலை 12 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (12-07-2014) பிபிசி தமிழோசையில்,
தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் 18 வயதுக்கு குறைவான மாணவ மாணவிகள் செல்லிடபேசிகள் பயன்படுத்துவதை தடுக்கும்படி அம்மாநில சட்டமன்ற குழு பரிந்துரை செய்திருப்பது குறித்த செய்திகள்;
தமிழக தலைநகர் சென்னையில் சமீபத்தில் 61 பேர் பலியாக காரணமான 11 மாடி கட்டிட விபத்து பற்றி சிபிஐ விசாரணை கோரி திமுக பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருப்பது ஏன் என்பது குறித்து திமுகவைச் சேர்ந்த சென்னை நகரின் முன்னாள் மேயர் மா சுப்பிரமணியனின் விரிவான செவ்வி;
கேரளாவில் சுமார் 13,000 தமிழ் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக சில ஊடக செய்திகள் தெரிவித்த செய்தி உண்மையா என்று கேரளாவின் பாலக்கோட்டில் இருக்கும் தமிழாசிரியர் தினகரின் செவ்வி;
இலங்கையின் தமிழர் அரசியல் ஆளுமைகளில் முக்கியமானவராக பார்க்கப்படும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அவரது கொலை இலங்கை தமிழர் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் செவ்வி;
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்கவை சர்வதேச போட்டிகளிலிருந்து தடைசெய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது தொடர்பான தகவல்கள்;
அமெரிக்காவில் முன்பு எச் ஐ வி தொற்று முற்றாக நீங்கிவிட்டது என்று நம்பப்பட்ட குழந்தைக்கு மீண்டும் அந்த வைரஸ் தொற்று நீடிப்பதாக தெரியவந்திருப்பது குறித்த பிபிசியின் தகவல்கள்;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
