ஜூலை 16 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 16, 2014, 05:09 PM

இன்றைய (16-07-2014) பிபிசி தமிழோசையில்

அடுத்த ஆண்டு இலங்கைக்கு வரும் போப் பிரான்சிஸ், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மடுப் பகுதியில் சந்திக்கக் கூடும் என்று கூறும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் செவ்வி;

இலங்கையின் தலைநகர் கொழும்பில் தன் வீட்டுப்பணிப்பெண் மற்றும் ஆறுவயதுடைய சிறுவர் என இரண்டுபேரை கொலைசெய்த குற்றச்சாட்டில் உக்ரைய்ன் நாட்டை சேர்ந்த கணவன் மனைவி ஆகிய இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயற்படும் சி பி எஸ் ஸி என்றழைக்கப்படும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் தன் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்துப்பள்ளிகளிலும் சமஸ்கிருத மொழியை பரப்பும் நோக்கிலான சமஸ்கிரத வாரம் கடைபிடிக்கும்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருப்பது குறித்த செய்திகள்;

சமஸ்கிரத வாரம் கொண்டாடும்படி வந்திருக்கும் இந்த சுற்றறிக்கையை சி பி எஸ் ஸி பள்ளிகள் எப்படி பார்க்கின்றன என்பது குறித்து சி பி எஸ் ஸி பாடதிட்டத்தை கற்பிக்கும் 90 ஆண்டுகளாக டில்லியில் செயல்பட்டுவரும் தமிழ்கல்விக்கழக மேல் நிலைப்பள்ளியும் முதல்வர் வி மைதிலியின் செவ்வி;

வேட்டி அணிய தடை விதிக்கும் தனியார் கிளப்புகள் இனி தமிழ்நாட்டில் செயல்பட முடியாதபடிக்கு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது குறித்த செய்திகள்;

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுக்கு மாற்றாக இந்தியாவின் துணையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் பிரிக்ஸ் வங்கியின் தேவை மற்றும் சர்வதேச முக்கியத்துவம் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

நிறைவாக இன்றைய பலகணியில் 1990களில் போஸ்னிய யுத்தத்தின்போது ஸ்ரெப்ரனீச்சாவில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்களின் படுகொலைக்கு நெதர்லாந்து அரசாங்கமும் பொறுப்பேற்கவேண்டுமென நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த படுகொலைகளின் பின்னணியை விளக்கும் பிபிசியின் செய்திப்பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.