இன்றைய ( ஜூலை 22) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 22, 2014, 05:08 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் முதலில் செய்தி அறிக்கை, பின்னர் தொடரும் செய்தி அரங்கில்

யுக்ரெயினில் சுடப்பட்டு விழுந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுடப்பட்டு விழுந்த சம்பவத்தில் கறுப்புப்பெட்டிகள் கையளிக்கப்பட்ட்து பற்றியும், விசாரணை குறித்த சர்ச்சை பற்றியும் வரும் செய்திகள் அடங்கிய குறிப்பு

இன்று பெண்கள் குறித்த சர்வதேச உச்சி மாநாடு தொடங்கும் நிலையில், பால்ய விவாகம், கட்டாய திருமணம் போன்ற பிரச்சினைகள் இந்தியாவில் இன்னும் நீடிக்கின்றனவா என்பது குறித்த ஒரு பேட்டி

இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் அரசியல் தலையீடு இருந்ததாக முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்கள் குறித்து தொடரும் அரசியல் சர்ச்சை பற்றிய செய்தி

ஒலி காசா தாக்குதல்களை அடுத்து இலங்கை இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டிருப்பது பற்றிய செய்தி

ஆகியவையும்

பின்னர் அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியும்

இடம் பெறுகின்றன