ஜூலை 26 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (26-07-2014) பிபிசி தமிழோசையில்
ஊடகப் பயிற்சிக்காக சென்றபோது ஓமந்தை சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் வாகனத்தில் கஞ்சா இருந்ததால் அவர்களைக் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
ஆனால் இந்த அந்த கஞ்சாவை ராணுவமே தமது வாகனத்தில் வைத்தது என்னும் ஊடகவியலாளரின் பிரத்யேக செவ்வி;
காசாவில் இன்று அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து இந்த மோதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் 2 பேர் உயிரிழந்தும் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளது குறித்த செய்திகள்;
காசாவில் நடக்கும் மோதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
கிளாஸ்கோவில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளின் மூன்றாவது நாளின் முக்கிய செய்திகள்;
இறுதியாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
