ஜூலை 28 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 28, 2014, 04:51 PM

Subscribe

இன்றைய (28-07-2014) பிபிசி தமிழோசையில்

ஆஸ்திரேலியாவால் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட தமிழ் தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் உள்ள தடுப்புக் காவல் மையம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருப்பது குறித்த செய்திகள்

அவர்களை இந்திய அதிகாரிகள் சந்திப்பார்கள் என்னும் ஆஸ்திரேலிய அமைச்சரின் முடிவு குறித்து ஆஸ்திரேலியத் தமிழர் காங்கிரஸைச் சேர்ந்த பால விக்னேஸ்வரனின் கருத்துக்கள்;

இந்த அகதிகள் சென்ற படகை விற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாண்டிச்சேரி காவல்துறையினர் இரண்டுபேரை கைது செய்திருப்பது குறித்து பாண்டிச்சேரியில் இருக்கும் தேசிய மீனவர் பேரவையின் தலைவர் எம் இளங்கோவின் பிரத்யேக பேட்டி;

யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்படவிருந்த திரைப்பட த்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

வட மாகான தலைமை செயலாளரை நீக்கும் அதிகாரம் இலங்கை ஜனாதிபதிக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக தலைமை நிதிபதி மொஹான் பிரிஸ் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

உள்நாட்டு மோதல் அதிகரித்துள்ள லிபியாவில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான பணிகள் ரமதான் மாதம் புனித ஈத் பெருநாள் முடிந்தவுடன் துவங்கப்படும் என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

இன்றைய விளையாட்டரங்கத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருக்கும் தமிழ்நாட்டு வீரர் சிவலிங்கம் சதீஸ்குமாரின் பிரத்யேக பேட்டி ஆகியவற்றை கேட்கலாம்.