கொள்ளிடம் ஆற்றில் கதவணை : விமர்சனத்துடன் விவசாயிகள் வரவேற்பு

Aug 05, 2014, 02:28 PM

Subscribe

மழைக்காலங்களில், காவிரி நதியில் பாயும் வெள்ள நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்க, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை ஒன்று கட்டப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். எனினும், தடுப்பணைகளைக் கட்டுவதால் மட்டுமே, காவிரிப்படுகையின் விவசாயம் செய்யும் லட்சக் கணக்கானவர்களின் பிரச்சினை முற்றாக தீராது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

தடுப்பணை கட்டப்படுவது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், நீர் பாயும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பது கவலையளிக்கும் விஷயம், அதில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம்.