ரொசெட்டா விண்கலத்தின் வியப்புமிகு பயணம்
Share
Subscribe
ஐரோப்பிய வின்வெளி அமைப்பு அனுப்பிய ரொசெட்டா வின்கலம், சி ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு வால் நட்சத்திரத்தை அணுகி, அதையொட்டிய தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. நீள்வட்டப் பாதையில், இந்த விண்கலம், அந்த வால் நட்சத்திரத்தைச் சுற்றிவந்து பலவிதமான ஆய்வுகள மேற்கொள்ளவுள்ளது. அந்த வால் நட்சத்திரம் மணிக்கு 1.35 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ரொசெட்டா விண்கலம் அதன் அருகில் செல்வதற்கு பத்தாண்டுகள் ஆகியுள்ளன. வால் நட்சத்திரங்கள் நம்முடைய சூரியக் குடும்பம் ஆரம்பித்த காலம்தொட்டே தோன்றியவை என்றும், அவ்வகையில் இவற்றை ஆய்வு செய்யும்போது, புவியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பது உட்பட பல விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்கிறார் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் சௌந்திரராஜ பெருமாள். ரொசெட்டா விண்கலத்தின் பயணம், அது செய்யவுள்ள ஆய்வுகள், அதன் மூலம் தெரியக் கூடிய விஷயங்கள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் டாக்டர் பெருமாள். அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.
