ஆகஸ்ட் 6, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (06-08-2014) பிபிசி தமிழோசையில்
வானியல் விஞ்ஞானத்தின் புதிய மைல்கல்லாக ஐரோப்பிய விண்கலமான, ரொசெட்டா விண்கலம், வால் நட்சத்திரம் ஒன்றுக்கு இணையாக பறந்து செல்ல உதவும் ஒரு சிக்கலான முயற்சியில் வெற்றி கண்டிருப்பது குறித்த செய்திகள்;
இந்த சாதனையின் முக்கியத்துவம் குறித்து தமிழக அரசின் பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணை இயக்குநர் முனைவர் சவுந்திரராஜபெருமாள் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டம்;
இனவாதத்தை தூண்டும் தொலைபேசி குறுஞ்செய்திகளை பகிர்ந்ததாக நான்கு முஸ்லீம்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;
இலங்கையின் வடமாகாண ஆளுநர் ஏற்கெனவே நிராகரித்த வட மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்தை மாகாண சபை ஏகமனதாக சட்டமாக நிறைவேற்றியிருப்பது குறித்த செய்திகள்;
ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை தமிழ் அகதிகளை சட்டவிரோதமாக அழைத்துச் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;
வேட்டிகட்டி வருபவர்களுக்கு எதிராக மனமகிழ் மன்றங்கள், விடுதிகள், திரையரங்கங்கள், வணிக வளாகங்களில் விதிக்கப்படும் தடைகளை நீக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்
தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தில் மருத்துவ வசதி இல்லாததால், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிருஷ்ணா நதியை நீந்திக் கடந்து மருத்துவமனையை அடைந்திருப்பது குறித்த செய்தி;
இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவில் பேறுகாலத்தேவைகள் இருக்கும் கிராமப்பெண்மணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வதில் இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் இளங்கோவின் பிரத்யேக செவ்வி ஆகியவற்றை கேட்கலாம்.
