ஆகஸ்ட் 8, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 08, 2014, 05:26 PM

Subscribe

இன்றைய (08-08-2014) பிபிசி தமிழோசையில்

இராக்கின் வடக்கில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் தொடங்கியிருப்பது குறித்த விரிவான செய்திகள்

இராக்கின் வடக்கே நடக்கும் உள்நாட்டுப்போரில் மோசமாக பாதிக்கப்படும் இனக்குழுமமாக பார்க்கப்படும் யாஸ்டிஸ் இனமக்கள் யார்; அவர்களின் பின்னணி என்ன என்பதை விளக்கும் பிபிசியின் செய்திக்குறிப்பு;

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு விசாரணைகள் இன்று மன்னாரில் துவங்கியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடமாகாணத்திற்கான நிதி ஆதாரங்கள் ஒதுக்குவதில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டுவதாக வடமாகாண முதல்வர் குற்றம் சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் 'உலகளாவிய அவசர நிலையை' பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் எபோலா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள்;

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை விசாரிக்க முடியாது என்று இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வும் மறுத்துவிட்ட நிலையில் இந்த வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருப்பது குறித்த செய்தி;

தமிழ்நாட்டிற்குள் இருக்கும் விடுதிகள், திரையரங்கங்கள், வணிக வளாகங்களில் வேட்டிக்கு விதிக்கப்படும் தடைகளை நீக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் ஆகியவற்றை கேட்கலாம்.