ஆகஸ்ட் 9, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 09, 2014, 05:41 PM

Subscribe

இன்றைய (09-08-2014) பிபிசி தமிழோசையில்

இராக்கின் வடக்கில் அமெரிக்க விமானங்கள் நேற்று முதல் தாக்குதல்கள் தொடங்கியிருக்கும் பின்னணியில் இராக் தொடர்பில் அமெரிக்காவின் கடந்தகால அணுகுமுறைக்கும் தற்போதைய அணுகுமுறைக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன என்பதை ஆராயும் அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க துணை அமைச்சர் பி ஜெ கிராவ்லியின் ஆய்வுக்கண்ணோட்டம்;

இலங்கையின் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழ் மாணவன் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள செயலுக்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் கிழக்கே இருக்கும் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு புதிய சாலை அமைக்கப்படும் வழிமுறை குறித்து உள்ளூர் தமிழ்மக்களிடம் சந்தேகத்தையும் கவலையையும் தோற்றுவித்திருப்பது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டில் கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய திரைப்படங்களுக்கு தமிழீழ ஆதரவு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்த செய்திகள்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.